Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 18, 2021

TNPSC: ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் வேளாண்மை நீட்டிப்பு சேவை துறை வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு- LAST DATE-4.3.2021

தமிழக அரசின்தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை துறையில் காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி (நீட்டிப்பு) பணியிடங்களை

நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1.19 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். இப்பணியிடம் குறித்த முழு விபரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC)

காலிப் பணியிட விபரங்கள்:

டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவை துறையில் தற்போது வேளாண்மை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 365 காலிப் பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:


மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் வேளாண்மையில் இளங்கலைப் பட்டம் (B.Sc Agri) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, தமிழில் போதுமான அறிவு பெற்றிருத்தல் அவசியம்.
வயது வரம்பு:-

டிஎன்பிஎஸ்சி Agricultural (Extension) பணிக்கு 01.07.2021 தேதியின் படி விண்ணப்பதாரர்கள் வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

ஊதியம் : ஊதியம் : இப்பணியிடங்களுக்கு ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 04.03.2021-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை பதிவுக்கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வுக்கான தேர்வுக்கட்டணம் 100 ரூபாய் செலுத்த வேண்டும். எனவே, முதன் முதலாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 250 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணம் 200 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது.
தேர்வு முறை:

Agricultural Officer (Extension) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பணிக்கான எழுத்துத் தேர்வு வரும் 18.04.2021 தேதியன்று நடைபெறும்.

No comments:

Post a Comment