Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 17, 2021

விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கரோனா: 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு திங்கள்கிழமை வரை‌ விடுமுறை

விழுப்புரத்தில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பத்தாம் வகுப்பு மாணவிகள் 80 பேருக்கு திங்கள்கிழமை வரை‌ விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் நகரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 3,500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கரோனா பரவல் காரணமாக தற்போது 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த வகுப்புகளில் பயிலும் 1850 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளியில் பணியாற்றி வரும் பத்தாம் வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து அறிந்த சுகாதாரத்துறையினர் புதன்கிழமை அந்த பள்ளிக்கு நேரில் வந்து ஆசிரியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியர் வகுப்பெடுத்த வகுப்பில் உள்ள 80 மாணவிகளுக்கு வரும் திங்கள்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிக்கு வரும் மாணவிகள் அனைவருக்கும் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும், ஆசிரியர்கள் 74 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று பள்ளியின் தலைமையாசிரியர் சசிகலா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment