Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 17, 2021

ஆம்பூரில் 11-ம் வகுப்பு மாணவர் உட்பட ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு

ஆம்பூரில் 11-ம் வகுப்பு மாணவர் உட்பட 8 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங் கியுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட் டந்தோறும் நோய் தடுப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி யுள்ளது. திருப்பத்தூர் மாவட் டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 7,664 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

நோய் தொற்று குறைவாக இருந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது கரோனா பாதிப்பு மெல்ல, மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆம்பூரில் அரசுப்பள்ளி மாணவர் உட்பட நேற்று ஒரே நாளில் 8 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்பூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர் களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி யுள்ளனர். மேலும், ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன் உத்தரவின்பேரில் அரசு நிதியுதவி பள்ளி முழுவதும் கிருமி நாசினி நேற்று தெளிக்கப்பட்டு பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தும் பணியில் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அதேபோல, ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், சாமியார் மடத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், சமீபத்தில் துபாய் நாட்டில் இருந்து ஆம்பூர் வாணக்கார கொல்லைப்பகுதிக்கு திரும்பிய 41 வயதுள்ள ஆண் ஒருவர், கதவாளம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுள்ள ஆண் உட்பட நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர் பில் இருந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட் டுள்ளது.

இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் ஆம்பூர் நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் கிருமி நாசினி மற்றும் நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர் களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டததை தொடர்ந்து, ஆம்பூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவமுருகன் தலை மையிலான நகராட்சி அலுவலர்கள் ஆம்பூர் புறவழிச்சாலை, எஸ்.கே.ரோடு, நேதாஜி சாலை, பஜார் பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது. முகக்கவசம் அணியாமல் வந்த 20 பேருக்கு தலா ரூ.200 அபராதத்தை நகராட்சி அதிகாரிகள் விதித்தனர். அதேபோல, ஆம்பூர் பஜார் பகுதிகளில் நடத்திய ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதி காரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment