JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
உலகின் பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் ஆப் மார்ச். 19 இரவு 10.30 மணியளவில் இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் முடங்கியது. மற்ற வலைதளங்களான இஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவையும் முடங்கியதால் பயனாளர்கள் தகவல்களை அனுப்ப முடியாமல் தவித்தனர்.இந்தியா மற்றும் உலக நாடுகளில் சுமார் 200 கோடி பேர் வாட்ஸ் ஆப் ஐ பயன்படுத்தி வருகின்றனர்.
சுமார்43 நிமிடங்கள் வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் வாட்ஸ்அப் பயனாளர்கள் தகவல்களை அனுப்ப முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். இது தவிர பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற வலைதளங்களும் முடங்கியது.மீண்டும் சீரானதுஆனால், 43 நிமிட முடக்கத்திற்கு பிறகு வாட்ஸ் ஆப் சேவை சீரானது.
இதனால் அவற்றின் பயனாளர்கள் நிம்மதி அடைந்தனர். வாட்ஸ் ஆப் ஐ தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் வலைதளங்களும் சீராகியதுவாட்ஸ் ஆப் செயலி முடக்கம் குறித்து அமெரிக்காவில் இயங்கி வரும் அந்நிறுவனம் சார்பில் இதுவரை அதிகாரபூர்வமான தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment