Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 23, 2021

பள்ளி முதல் கல்லூரி வரை தமிழில் படித்தவருக்கே 20% ஒதுக்கீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி முதல் கல்லூரி வரை தமிழில் படித்தவருக்கே இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

டிஎன்பிஎஸ்சி துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிக வரி அலுவலர் உட்பட 181 பணியிடங்களை நிரப்ப 2019-ல் அறிவிப்பு வெளியானது. இத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றும் நான் தேர்வாகவில்லை.

தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசு வேலையில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டிலும் நான் தேர்வாகவில்லை.

விசாரித்தபோது, தொலைநிலைக் கல்வியில் படித்தோருக்கும் தமிழ் வழிக்கல்விச் சலுகை வழங்கியது தெரிய வந்தது.

தொலைநிலைக் கல்வியில் படிப்பவர்கள் சில படிப்புகளை ஆங்கில வழியிலும், சில படிப்புகளை தமிழ் வழியிலும் படிக்கின்றனர். இவர்களை தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களாகக் கருத முடியாது.

எனவே கல்லூரிகளுக்கு நேரில் சென்று தமிழ் வழிக் கல்வி பயின்றோரை அடிப்படையாகக் கொண்ட புதிய பட்டியல் தயாரித்து குரூப் 1 நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்து.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை அல்லது நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை தமிழ் வழியில் பயின்றோருக்கு மட்டுமே தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment