JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கொரோனா தொற்று பரவல் காரணமாக, பி.ஆர்க் படிப்பு சேர்க்கைக்கான மதிப்பெண் தகுதியை மத்திய கல்வி அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது. இளநிலை கட்டிடக்கலை படிப்பாக கருதப்படும் பி.ஆர்க் படிப்புக்கு வழக்கமாக, பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய 3 பாடங்களிலும் குறைந்தப்பட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே, விண்ணப்பிக்க முடியும்.
தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி தேர்விலும் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் நடத்தப்படாமல், ஆன்லைன் மூலம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால், அவர்களால் படிப்பில் முழு அளவில் கவனம் செலு்த்த முடியவில்லை. இதனால், 2021 - 2022க்கான மதிப்பெண் தகுதியை மத்திய கல்வித் துறை குறைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘2021-2022ம் ஆண்டுக்கான பி.ஆர்க் படிப்புக்கான மதிப்பெண் தகுதியாக, பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், கணித பாடத்துடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
இவற்றில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க தேவையில்லை. அதேபோல், 10ம் வகுப்புக்குப் பிறகு 3 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு முடித்தவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் போதுமானது,’ என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment