Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 17, 2021

சென்னை உயர்நீதிமன்றத்தில் 367 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர், சோப்தார் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிக்கை எண்.36/2021 14.03.2021

மொத்த காலியிடங்கள்: 367

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: சோப்தார் - 40
பணி: அலுவலக உதவியாளர் - 310
பணி: சமையல்காரர் - 01
பணி: வாட்டர்மேன் - 01
பணி: ரூம் பாய் - 04
பணி: காவலாளி - 03
பணி: புத்தக மீட்டமைப்பாளர் - 02
பணி: நூலக உதவியாளர் - 06

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி: எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வீட்டு பராமரிப்பில் அனுபவம், சமைப்பதில் அனுபவம் போன்ற தகுதிகளை பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதவற்ற விதவைகள் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதில் முழு விலக்களிக்கப்படுகிறது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 (ஒவ்வொரு பணிக்கு) கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பொது எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.04.2021

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.04.2021

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் அல்லது https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_36_2021_eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment