JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் ஆடாதொடையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.
ஆடாதொடை மூலிகையை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். சளி அல்லது இருமல் ஏற்பட்டால் கால் டீஸ்பூன் ஆடாதொடை பொடியை தேவையான அளவு தேனில் குழைத்து, கலந்து சாப்பிட்டு வந்தால் சளி குணமாவதோடு நுரையீரலும் பலமாக இருக்கும். மேலும் ஆடாதோடை இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
இதனை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இது வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். மேலும் ஆடாதொடை மூலிகைச் செடி வளரும் இடத்தில் அதிக ஆக்ஸிஜன் இருக்கும். அதனால் மனிதன் ஆரோக்கியமாக வாழலாம். இது ரத்தத்தை சுத்திகரிக்கும். ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகள் வராமல் பாதுகாப்பது உள்ளிட்ட வேலைகளை செய்கிறது.
No comments:
Post a Comment