Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 15, 2021

9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு... மார்ச்-31க்கு பிறகு விடுமுறை.. வெளியான மகிழ்ச்சி செய்தி.!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. 

இதையடுத்து 9-11 மாணவர்களுக்கு யாரும் எதிர்பாராத வகையில் தமிழக அரசு பொதுத் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் என்று மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் 12 மாதங்களுக்கு மட்டுமே 3ஆம் தேதி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு ம-2 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்துமே பள்ளிகளில் நடைபெறும் என்பதால் பள்ளி வளாகங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதனால் அனைத்து பள்ளிகளிலும் வரும் 31 ஆம் தேதிக்கு பிறகு கோடை விடுமுறை உள்ள விடுவதற்காக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

எனவே வரும் 22ஆம் தேதிக்குள் மாணவர்களுக்கு பருவத் தேர்வுகளை முடித்து விட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்பின்னர் கோடை விடுமுறை விடப்படவுள்ளது. தேர்தலுக்கு பிறகு பிளஸ் டூ வகுப்பிற்கு மட்டும் தேர்தலுக்கு பிறகு நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment: