Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 15, 2021

பத்தாம் வகுப்புக்கு திருப்புதல் தேர்வு: தலைமையாசிரியர்களுக்கு அதிகாரம்

சிலபஸ் முடித்த பின், அந்தந்த பள்ளி அளவில், பத்தாம் வகுப்புக்கு திருப்புதல் தேர்வு நடத்துவது குறித்து, தலைமையாசிரியர்களே முடிவெடுப்பர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கொரோனா தொற்று காரணமாக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டது. ஆனால், மதிப்பெண்கள் எப்படி கணக்கிடுவது என்பது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தற்போது வரை வெளியிடப்படவில்லை. 

இந்நிலையில், கிருஷ்ணகிரி, வேலுார் உள்ளிட்ட சில மாவட்டங்களில், பருவத்தேர்வு நடத்த அட்டவணை வெளியிடப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷாவிடம் கேட்டபோது, பத்தாம் வகுப்புக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்துவது குறித்து, இயக்குனரகத்தில் இருந்து, அதிகாரப்பூர்வ இல்லை. அந்தந்த பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறன் அறிய, தேர்வுகள் நடத்த, தலைமையாசிரியர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. 

சிலபஸ் முடித்த பின், விரைவில் பள்ளி அளவில், மாணவர்களின் கற்றல் திறன் அறிய, திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும். இது அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுத்து கொள்வர். இயக்குனரக அறிவிப்பின்றி, பொது அட்டவணை வெளியிட்டு, தேர்வுகள் நடத்த முடியாது, என்றார்.

No comments:

Post a Comment