Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, March 20, 2021

தமிழகத்தில் 9,10,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு.




 வருகிற 22ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக விடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும்.

தமிழக அரசின் செய்திக் குறிப்பு :

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரின் பரிந்துரைகளை ஏற்று , மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை , பள்ளிக் கல்வித் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளோடு ஆலோசிக்கப்பட்டு கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது. 

கோவிட் தொற்று அதிகரித்து வருவதாலும் , கோவிட் தொற்றால் மாணவர்களும் அகனால் பொதுமக்களும் பாதிக்கக்கூடாது என்பதாலும் , மாணவர்ச 3/4 பொதுமக்களின் நலன்கருதி வரும் 22.3.2021 தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள 9 , 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான விடுதிகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

எனினும் 9 , 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு இணையவழி / டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். மேலும் , தமிழ்நாடு மாநில வாரியம் தவிர மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அத்தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்டுள்ளபடி நடைபெறும். இப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அவர்களுக்கான விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. கோவிட் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் அரசால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment