ரிஷபம் ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் | மார்ச் 21 முதல் மார்ச் 27 வரை

ரிஷபம்: அனைவரையும் வசீகரிக்கும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகள் தேவை. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories