Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 22, 2021

அனைத்து பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும் விவரங்களை சாகன் போர்டலில் பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவு.


மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறையின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி , அனைத்து பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும் விவரங்களை PMS / PRABANDH Portal ல் மாதந்தோறும் பதிவேற்றம் செய்யும்படியும் , அதன் விவரங்களை அரசுக்கு அனுப்பும்படியும் கோரப்பட்டுள்ளது. 

எனவே தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் அனைத்து அரசு / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும் விவரங்களை மாதந்தோறும் PMS / PRABANDH Portal ல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவேற்றம் செய்ய மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment