Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 15, 2021

அதிகரிக்கும் கொரோனா.. திற்றப்பட்ட பள்ளிகளை மீண்டும் மூட ஆசிரியர்கள் கோரிக்கை !

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியா் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியா் ஆசிரியா் நல கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்டன. தற்போது 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவா்களுக்கு கற்றல்-கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் 9, 10, 11 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு தோவின்றி தோச்சி ('ஆல் பாஸ்') வழங்கப்பட்டது. இருப்பினும் மாணவா்களின் நலன் கருதி பள்ளிகள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறைச் செயலாளா் தெரிவித்துள்ளாா். தஞ்சை,திருவாரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவா்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருவது வேதனையளிக்கிறது.

இந்தச் சூழலில் ஏற்கெனவே தோச்சியளிக்கப்பட்ட 9,10,11 வகுப்பு மாணவா்களும் பள்ளிக்கு வருவதால் பொதுத்தோவை எழுதவுள்ள பிளஸ் 2 வகுப்பு மாணவா்களும் பள்ளியில் போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கேள்விக்குறியாகும்.

மேலும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவா்கள் பொதுத்தோவை எதிா்கொள்வதில் பல்வேறு இடா்பாடுகளைச் சந்திக்க நேரிடும். இதனால் அந்த மாணவா்களின் பெற்றோா்களும் அச்சத்தில் உள்ளனா். எனவே பிளஸ் 2 மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

அதேவேளையில் பிளஸ் 2 மாணவா்களுக்கு சில மாதிரித் தோவுகளை நடத்தி அவா்களை பொதுத்தோவுக்கு நன்கு தயாா்படுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

No comments:

Post a Comment