Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 15, 2021

வெங்காயத் தோலை தூக்கி எறியாதீர்கள்!





வெங்காயம் அனைத்து வகையான உணவுகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். வெங்காயத்தில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், வெங்காயத்தின் தோலிலும் சத்துகள் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

சாதாரணமாக வெங்காயத்தை பயன்படுத்தும் நாம் வெங்காயத் தோலை குப்பையில்தான் போடுகிறோம். ஒரு சிலர் செடிகளின் வளர்ச்சிக்காக அதனை உரமாகப் போடுவதுண்டு.

ஆனால், வெங்காயத் தோலில் க்யூயர்சிடின் எனும் நிறமி உள்ளது. இது தமனிகளில் ஏற்படும் அடைப்பைத் தடுப்பதுடன் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

மேலும், வெங்காயத் தோலில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டவை. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். குடல் பிரச்னைகளை சரிசெய்யும் தன்மைகளை கொண்டுள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வெங்காயத் தோலின் சாறு பயன்படுகிறது.

வெங்காயத் தோலை வீணாக்காமல் எவ்வாறு பயன்படுத்தலாம்

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் வெங்காயத் தோலை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். சில நிமிடங்கள் கொதித்ததும் அதனை இறக்கி வடிகட்டி அதில் சிறிது தேன் அல்லது உப்பு கலந்து குடிக்கலாம்.

தண்ணீருடன் வெங்காயத் தோல் மற்றும் டீ அல்லது காபித் தூள் சேர்த்து தேநீர் வடிவில் அருந்தலாம்.

எனவே, இனி வெங்காயத் தோலை வீணாக்காமல் பயன்படுத்துங்கள்.

No comments:

Post a Comment