Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 29, 2021

உங்க சர்க்கரை நோய் மீது அக்கறையிருக்கா ?அப்ப இதை சாப்பிடுங்க .

சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே 'சர்க்கரைக் கொல்லி' என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம்.

சிறுகுறிஞ்சான் ரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இது தினமும் இன்சுலின் ஊசி போடும் டைப் 1 சர்க்கரை நோயாளியின் நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

எல்லா இந்திய மருத்துவ முறைகளிலும் இந்த மூலிகைக்கொடி மூட்டுநோய், இருமல், அல்சர் மற்றும் கண்களில் வலி ஆகிய நோய்களுக்கான மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

அழற்சி(Inflammation), வயிற்று மந்தம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் வேர்கள் பாம்பு கடிக்கு மருந்தாகும். .

சிறுகுறிஞ்சான் இலைகள் அத்துடன் சம எடை அளவு நாவற்கொட்டைகள் எடுத்து இரண்டையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தி, தனித்தனியாக இடித்து, தூளாக்கி, சலித்து, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு 1 டீஸ்பூன் அளவு தூளை வாயில் போட்டுக் கொண்டு வெந்நீர் அருந்தி வர வேண்டும். இதை தொடர்ந்து 40 நாட்கள் வரை காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

ஒரு சில பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவதில் சிக்கல் ஏற்படும். மாதவிலக்கு சரியாக ஏற்பட ஒரு கைப்பிடி சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 2 கைப்பிடி அளவுகள் இலைகளையும் சேர்த்து, நன்றாக மைய அரைத்து, பசையாக்கி, தினமும் காலை வேளைகளில் வெறும் வயிற்றில் ஒரு நாள் மட்டும் உட்கொள்ள மாதவிலக்கு குறைபாடுகள் நீங்கும்.

No comments:

Post a Comment