Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 29, 2021

உடலில் ஆறாத புண்கள், கடுமையான பல்வலி.. அனைத்திற்கும் தீர்வு.

நாயுருவி இலை பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

நாயுருவி என்ற மூலிகை தரிசு நிலங்கள், வேலியோரங்களில் காடு மலைகளில் தானாக வளரும். மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை அட்டகர்ம மூலிகை என சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மூலிகை செடியில் இரண்டு வகை உண்டு. ஒன்று பச்சை நிற இலை, தண்டுகளை கொண்ட ஆண் நாயுருவி.

சிவப்பு இலை, தண்டுகளை கொண்ட பெண் நாயுருவி. இது செந்நாயுருவி என அழைப்பர். இதன் வேர் பற்களுக்கு மிகவும் ஏற்றது. முன்பு காலத்தில் பற்பசைக்கு பதில் இதன் வேரைக் கொண்டு பல் துலக்கி வந்தனர், இதனால் பற்கள் வெண்மையுடன் வலிமையாகவும் இருந்தது. பாக்டீரியா, கிருமிகள் தாக்காமல் கடுமையான பல்வலி ஏற்படாமல் இருந்தது.

நாயுருவி வேருடன் சிறிது கடுகு எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும் என்று கூறுவர். 100 கிராம் நாயுருவி இலையை 500 மில்லி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி கொதிக்க வைத்து இறக்கி அதே எண்ணெயில் உள்ள இலைகளை எடுத்து விழுதாக அரைத்து மீண்டும் எண்ணெயில் கலந்து கொள்ளவும். இந்த எண்ணெயை ஆறாத புண்கள், வெட்டுக் காயம், சீழ் வடியும் பகுதிகளில் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment