ராசிபுரத்தில் அரசுப்பள்ளி மாணவர், ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு!

நாமக்கல் ராசிபுரம் அருகே அரசுப்பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அண்ணாசாலை பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 11 ஆம் வகுப்பு படித்து வரும் அதே பகுதியை சேர்ந்த மாணவருக்கு, சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து, மாணவருக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, மாணவருடன் தொடர்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நாமக்கல்லை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பள்ளியில் உள்ள அனைவருக்கும் சுகாதாரத்துறையினர் சிறப்பு முகாம் அமைத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories