Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 12, 2021

இனி இந்த படிப்பில் சேர கணிதம், இயற்பியல் தேவையில்லை !!

BE,BTech ஆகிய பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கு இனிமேல் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என்று இந்திய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 12-ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிப்பொறியியல் ஆகிய அறிவியல் பாடங்களை படித்திருக்க வேண்டும் என்ற நிலை இதுவரை இருந்து வந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாற்றப்பட்டு வணிகவியல் மற்றும் வேளாண்மை பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பொறியியல் பட்டப் படிப்பில் சேரலாம் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.

பொறியியல் பட்டப் படிப்புகளில் சேருவதற்கு வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment