JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்களுக்கான புதிய வாக்காளர் அடையாள அட்டை அஞ்சல் மூலம் வீட்டுக்கே அனுப்பிவைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறுகையில்," இ-சேவை மையங்களில் பதிவு செய்துள்ள இளம்தலைமுறை வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதற்கு வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அஞ்சல் மூலமாக அவர்களுக்கு வீடுகளுக்கே வாக்காளர் அட்டை அனுப்பிவைக்கப்படும். மேலும் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்கள் அடையாள அட்டையை பெற ஆன்லைன் மூலம் எளிய செயல்முறையில் பதிவு செய்யலாம். முன்பு இதன் செயல்முறை கடினமாக இருந்தது. தற்போது வாக்களர்களுக்கு உதவும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்தமுறையில் பதிவு செய்தவர்களுக்கும் புதிய வாக்காளர் அட்டை அஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்படும்' என்றார்.
I applied for my voter I'd in 4 times but Always it rejected don't know the reason.i gave all I'd proof also
ReplyDelete