Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 19, 2021

பிரியாணி இலையின் மருத்துவ குணங்கள்

உடலில் உள்ள நோய்களை தீர்க்கும் பிரியாணி இலையில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவை சமைக்கும் போது மிகுந்த கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு உணவுக்கும் பல வகையான மசால்களை பயன்படுத்தி தான் சமைக்கிறோம். அதிலும் குறிப்பாக பிரியாணி செய்யும்போது அதில் பிரியாணி இலை போடுவது வழக்கம். ஆனால் அந்த பிரியாணி இலையில் எவ்வளவு பயன்கள் உள்ளது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பிரியாணி இலை யில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கை, கால் மற்றும் மூட்டு வலிகளுக்கு அற்புத மருந்தாக பயன்படுகிறது. இந்த எண்ணையை தலையில் தேய்த்து மசாஜ் செய்தால் தலைவலி சரியாகும். பிரியாணி இலை யில் உள்ள என்சைம்ஸ் என்ற புரதப் பொருள் உணவை விரைவில் செரிமானம் அடைய செய்கிறது. பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வர சிறுநீரக பிரச்சனைகளை சரிசெய்யும்.

No comments:

Post a Comment