Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 31, 2021

இதய நோய்களுக்கு எல்லாம் தீர்வு தருமாம்!







கொத்தமல்லி அனேகமாக உலகின் அனைத்து நாடுகளின் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை உணவுப் பொருளாக இருக்கிறது.

இந்த கொத்தமல்லியின் விதைகள் நமது நாட்டில் தனியா என அழைக்கப்படுகின்றன. இதில் பல்வேறு மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளது.

அந்தவகையில் தனியாவை பயன்படுத்துவதால் நமக்கு உடல் ரீதியாக கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கணினிகளில் வேலை செய்வோருக்கு கண்கள் எளிதில் பாதிப்படையும். இதற்கு கொத்தமல்லி விதையை நீரில் கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் புத்துணர்வு பெறும்.
இதய நோய்கள் ஏற்படாமல் இருக்க அடிக்கடி உணவில் கொத்தமல்லி விதைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு அடிக்கடி புளித்த ஏப்பம் ஏற்படும். இந்த புளித்த ஏப்பத்தை போக்க தனியாவுடன் சிறிது சோம்பு சேர்த்து சாப்பிட்டால் குணமடையும்.
கொத்தமல்லி விதை பொடியை தொடர்ந்து உபயோகப்படுத்தும் போது எளிதில் ஜீரணமாகாத உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணமடைய செய்யும்.
ஜலதோஷம் ஏற்பட்டாலே தலைவலி ஏற்படும். இவர்கள் கொத்தமல்லி விதையை அரைத்து நெற்றியில் ஒத்தல் போட்டால் தலைவலி, மூக்கடைப்பு குணமாகும். மேலும் பித்தத் தலைவலி உள்ளவர்கள் சந்தனத்துடன் கொத்தமல்லியை அரைத்து ஒத்தடம் கொடுத்தால் பித்தம் தணிந்து தலைவலி குணமாகும்.
தோலில் வெடிப்புகள் சரியாக, தனியா கஷாயம் செய்து அருந்தவும். ஒரு தேக்கரண்டி விதைகளை கொதிக்கச் செய்து, விழுதாக்கி அதன் மீது தடவவும்.
கொத்தமல்லி விதையை வாயில் வைத்து மென்று உமிழ்நீரை இறக்கினால் சில நேரங்களில் பல் இடுக்குகளில் உள்ள கிருமிகளாலும், குடல் அல்லது வயிற்றுப் புண்களாலும் வர கூடிய வாய் துர்நாற்றம் நீங்கும்.
மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு இரத்தப் போக்கை கட்டுப்படுத்த தனியா விதைகளை கஷாயம் செய்து பாலுடன் அருந்தவும்.

No comments:

Post a Comment