Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, March 27, 2021

தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வை ஏப். 30-க்குள் முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு எதிராக தலைமை ஆசிரியர்கள் பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை விதித்தார்.

இறுதி விசாரணையில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வை ஏப். 30-க்குள் நடத்த வேண்டும். அதன் பிறகு தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தடை விதிக்க கோரியும் அரசு சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், ஏப்ரல் 30-க்குள் தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment