Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 25, 2021

கணினி ஆசிரியர்களுக்கான விடியல் காத்திருப்பு...

தமிழகத்தில் பி.எட் கணினி பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வெல்லும் என அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் வெ.குமரேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, அரசு பள்ளிகள் மேன்மை

பெறுவதற்காக முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்கள் சமச்சீர் கல்வி அடிப்படையில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பில் அறிமுகம் செய்தார்.

இதனை பின்பற்றி, அண்டை மாநிலங்களும் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்து, மாணவர்களுக்கு கணினி கல்வியை வழங்கி வருகிறது.

தமிழகத்திலும் கணினி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. கிட்டதட்ட 60,000 பேர் வேலைவாய்ப்பை நோக்கி காத்திருந்தனர்.

ஆட்சி மாற்றத்திற்கு பின், கணினி கல்வி நிறுத்தப்பட்டது. 2011ம் ஆண்டு முதல் மாணவர்கள் நலன் கருதி கணினி கல்வியை அரசு தொடக்க வகுப்பில் கொண்டு வர வேண்டும் எனவும், இதன்மூலம் வேலையில்லா கணினி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பினை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கணினி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில கழக துணை பொதுச்செயலாளர் திண்டுக்கல் ஐ பெரியசாமி அவர்களை சனிக்கிழமை சந்தித்து 60,000 கணினி ஆசிரியர்கள் சார்பாக கோரிக்கை மனு அவரிடம் வழங்கப்பட்டது. அதில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வர வேண்டும், கணினி ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கோரிக்கையை படித்த, அவர், கணினி ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் அவரது வேலை வாய்ப்பினை உறுதி செய்யப்பபடும், கணினி ஆசிரியர்கள் கோரிக்கை திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தார். கணினி ஆசிரியர்கள் சார்பில் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். கணினி ஆசிரியர்களின் கோரிக்கை வெல்லும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

சந்திப்பின்போது, திண்டுக்கல் நிர்வாகிகள் சிவராஜ், நாகேந்திரன், ஜான்பால், லாரான்ஸ், சத்தியமூர்த்தி மற்றும் சக கணினி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.







வெ.குமரேசன்,

மாநிலப் பொதுச் செயலாளர் ,

9626545446 ,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

No comments:

Post a Comment