Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 1, 2021

உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15 க்குள் பணி மாறுதல் செய்ய உத்தரவு!


அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும் . உபரி ஆசிரியர்களால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதியிழப்பினை தவிர்த்திடும் பொருட்டும் . சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.A. ( MD ) Nos . 76 , 225 , 341 of 2019 , 1612 , 1076 , 1093 , 1461 , 1473 and 1531 of 2018 - ல் 09.04.2019 ம் நாளிட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் , அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை சிறுபான்மையற்ற தொடக்க / நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் , பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்து கீழ்க்கண்ட நெறிமுறைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆகியோருக்கு அறிவுறுத்தலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது . ( i ) ஒவ்வொரு தனிமேலாண்மையும் பள்ளியும் ஒரு அலகாகவும் . ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைக் கொண்டு கூட்டு மேலாண்மையாக செயல்படும் பள்ளிகள் அலகாகவும் கருதப்படுகிறது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15 க்குள் பணி மாறுதல் செய்து நவம்பர் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவின் நகல்.

Click here to download pdf

No comments:

Post a Comment