கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் -ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் 90% பலன் தரும்: ஆய்வில் தகவல்!! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Thursday, April 8, 2021

கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் -ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் 90% பலன் தரும்: ஆய்வில் தகவல்!!

கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் -ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் 90% பலன் தரும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் இரு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கின்றன. ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் கோவாக்ஸின் மருந்தும், அஸ்ட்ராஜென்கா, சீரம் நிறுவனம் சார்பில் கோவிஷீல்ட் மருந்தும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு 28 நாட்களுக்குப் பின் 2-வது டோஸ் மருந்து செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு முன்பு அறிவுறுத்தி இருந்தது.


ஆனால் சமீபத்தில் 28 நாட்களுக்குப் பின் என்பதற்குப் பதிலாக 6 வாரங்கள் முதல் 8 வாரங்களுக்கு இடையே 2-வது டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என்றும் அதற்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாகவே ஐரோப்பாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு தொடர்ந்து தடை விதித்து வருகிறது. தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்தம் உரையும் பிரச்னை ஏற்படுவதால் மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் இதனால் தடுப்பூசிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் அந்நாடுகள் அறிவித்திருந்தன.

இந்த நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2வது டோஸ் -ஐ 75 முதல் 90 நாட்களுக்குள் செலுத்திக் கொண்டால் 90% பலன் தரும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 2வது டோஸ் செலுத்துவதற்கு ஒரு மாதம் இடைவெளி இருந்தால் 70% பலன் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், 2.5 முதல் 3 மாத இடைவெளி இருப்பது கூடுதல் பலன் தரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி பரிசோதனையின் போது சில நோயாளிகளுக்குஒரு மாத கால இடைவெளியில் 2வது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 60-70 சதவீதம் பலன் கிடைத்தது. சில ஆயிரம் நோயாளிகளுக்கு 2-3 மாத இடைவெளியில் 2ம் டோஸ் வழங்கப்பட்டது. அங்குதான் அவர்கள் செயல்திறன் 90 சதவீதமாக இருப்பதைக் கண்டோம், என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad