Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 18, 2021

ஏப்ரல் 27, 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் ஏப்ரல் 27, 28, 30 ஆகிய தேதிகளில் முதல் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெஇஇ மெயின் தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், ஏற்கனவே பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு கட்டங்கள் நிறைந்தவடைந்து உள்ளது. அடுத்தகட்ட தேர்வு வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற இருந்தது.

இருப்பினும், கொரோனா தொற்றுநோயின் தற்போதைய நிலைமையைப் கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த ஜேஇஇ தேர்வுகளை மட்டும் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் குறித்து தேர்வு நடைபெறும் 15 நாட்களுக்கு முன்னர் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

மேலும், இதற்கிடையில், மாணவர்கள் தங்களை தேர்வுக்கு சிறப்பாக தயார்படுத்த இந்த நேரத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment