Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 18, 2021

தீயணைப்பு, சிறைத் துறை காவலர்கள் பணிக்கான உடற்திறன் தேர்வு தள்ளிவைப்பு: சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடந்தது. இதில், ஆயுதப்படை 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு ஆண்கள், பெண்கள் என 3 ஆயிரத்து 784 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 6 ஆயிரத்து 545 பேர், சிறைத் துறையில் 2-ம் நிலைக் காவலர் பதவிக்கு 119 பேர், தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இத் தேர்வில் 4 லட்சத்து 91 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரத்தை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற் தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் போட்டி ஆகியவை ஏப்.21-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சில நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இத்தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment