தபால் ஓட்டு மே 2 வரை போடலாம்: மாவட்ட கலெக்டர் தகவல் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Monday, April 19, 2021

தபால் ஓட்டு மே 2 வரை போடலாம்: மாவட்ட கலெக்டர் தகவல்

''வரும் மே, 2 காலை, 8:00 மணி வரை தபால் ஓட்டு போடலாம்,'' என, கரூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு வடநேரே தெரிவித்தார்.கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதி ஓட்டு எண்ணிக்கை அலுவலர்களுக்கான, பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. 

இதில் கலெக்டர் பிரசாந்த் மு வடநேரே பேசியதாவது: ஓட்டு எண்ணிக்கை நாளில் காலை, 5:00 மணிக்குள், மையத்துக்குள் அடையாள அட்டையுடன் இருக்க வேண்டும். மொபைல் போன் உள்ளிட்ட, எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது. ஓட்டு எண்ணிக்கைக்கு, 24 மணி நேரம் முன்பு நடக்கும், கணினி முறை குலுக்கலில் ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள், பணிபுரியும் இடம் குறித்து தேர்வு செய்யப்படுவர். 

ஒவ்வொரு ஓட்டு எண்ணிக்கை டேபிளிலும், ஓட்டு எண்ணிக்கை உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர் பணியில் இருப்பர். தபால் ஓட்டு எண்ணிக்கைக்காக, ஒரு ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர், இரண்டு ஓட்டு எண்ணிக்கை உதவியாளர்கள், ஒரு நுண் பார்வையாளர் பணியில் இருப்பர். அதிகபட்சமாக, நான்கு தபால் ஓட்டு எண்ணிக்கை டேபிள் அமைக்கப்படும். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வரும் மே, 2 ல் காலை, 8:00 மணி வரை தபால் ஓட்டு போடலாம். 

அதற்கு பிறகு, பெறப்படும் தபால் ஓட்டுகள் எண்ணிக்கைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அவர் பேசினார். டி.ஆர்.ஓ., லியாகத், சிறப்பு வருவாய் அலுவலர் கவிதா, கலெக்டர் நேர்முக உதவியாளர் ஷாஜகான், ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 64 பேர், உதவியாளர்கள், 62 பேர், நுண் பார்வையாளர்கள், 64 பேர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad