18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Monday, April 19, 2021

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு

நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும், 2-ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 3-ம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad