தமிழகத்தில் +2 பொது தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Sunday, April 18, 2021

தமிழகத்தில் +2 பொது தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வுகளை ஒத்திவைப்பதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது. மே 5-ம் தேதி தொடங்க இருந்த பொது தேர்வுகள், மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் இரு நாட்களுக்கு முன்பாக அறிவித்தது. ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று, ஐசிஎஸ்இ (ICSE ), ஐஎஸ்சி (ISC) நடத்தும்10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக CISCE எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஜூன் மாதம் முதல் வாரத்தில் தேர்வுகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad