Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 20, 2021

நெட் தேர்வு 3-வது முறையாக ஒத்திவைப்பு


கரோனா அச்சுறுத்தல் காரணமாக யுஜிசி நெட் தேர்வுகள் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மே 2-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நெட் தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடபாக தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கரோனா பரவல் காரணமாக தொடர்ந்து 3-வது முறையாக நெட் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மீண்டும் தேர்வு எழுதுவதற்கு 15 நாள்களுக்கு முன்பு நெட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment