சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, April 20, 2021

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு


நம்மை சுற்றியுள்ள உயிருள்ள உயிரற்றப் பொருள்களை தான் நாம் சுற்றுச்சூழல்
என்கிறோம் . ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சுற்றுச்சூழல் பெரும் பங்கு
வகின்றது. ஆனால் இப்பொழுது பல அறிவியல் மாற்றங்களால் இயற்கைக்கு
மிகப்பெரிய தீமை மட்டும்தான் இது இயற்கைக்கு மட்டும் இல்லை நமக்கும்
சேர்த்துதான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

சுற்றுச்சூழல் மாசடையும் முறைகளும் அதன் விளைவுகளும்:

காற்று மாசுபாடு
நீர் மாசுபாடு
மண் மாசுபாடு
ஒலி,ஒளி மாசுபாடு, உணவுபொருட்கள் மாசுபாடு என வரிசை நீண்டு கொண்டே
செல்லும்

நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் நாமே மாசுபடுத்தி கொண்டு
மருத்துவமனை வாசலில் நிற்கிறோம்.

அக்கால மக்கள் சுற்றுபுறத்தை மாசுபடுத்தினாலும் அதனை சரி செய்வதற்கான
வழிகளையும் கடைப்பிடித்தனர், இயற்கையை கடவுளாக வணங்கினார்கள் ஆனால் நாம்
அதனைப்பற்றி கவலைக்கொள்வதே இல்லை. பருவநிலை மாறுதல்களின் விளைவை உணர்ந்த
முதல் தலைமுறையாக நாம்தான் இருக்கிறோம், அதனை சரி செய்யும் கடைசி
தலைமுறையாகவும் நாம் தான் இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் ஜே இன்ஸ்லீ.
ஆம் இப்பொழுது இயற்க்கையை நாம் பாதுகாக்காவிட்டால் நமது சந்ததியினர்க்கு
அதன் பயன்கள் கிடைக்காது ஹாலிவுட் படங்களில் வருவதுப்போல அவர்கள் வேறு
கிரகங்களுக்கு தான் செல்ல வேண்டும்.

டெல்லி காற்று மாசுப்பாடு பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான், மாசுபட்ட
காற்றை சுவாசிப்பது புகைப்பிடிப்பதற்கு சமம் என்று அறிக்கைகளும் வெளியானது.
அந்த நிலை நாம் வாழும் ஊர்களில் வருவதற்கு சில காலங்களே
போதுமானது.வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை ஒரு அரக்கன் போல் நம்மை
அச்சுருத்திகிறது.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, இயற்கையை இழந்து செயற்கையாக
வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சென்னை போன்ற பெரு நகரங்களில் காலை பணிக்கு
செல்வேர்களை பாருங்கள் எறும்பு போல சாலை எங்கும் இரண்டு சக்கர வாகனம்,
கார்கள் அதில் ஒருவர் மட்டும் பயனிப்பதுதான் கொடுமை இதனால் வாகன நெரிசல்
ஒலி மாசு, காற்று மாசடைகிறது. இதற்கு மாற்றாக பேருந்து, புகைவண்டி
பயன்படுத்தலாம் தினமும் முடியாவிட்டாலும் வாரத்திற்கு இரு முறை என்று
நீங்களே முடிவெடுத்து முயற்சி செய்வதால் சிறிதளவாவது மாற்றம் எற்படும்.

எதிர்கால சந்ததிக்கும் பொருள் சேர்த்து வைக்கும் மனிதர்கள் கொஞ்சம்
சுத்தமான காற்றையும் விட்டுச் செல்ல எண்ண வேண்டும். தமது சந்ததியினருக்கு
பொன்,பொருள் சேர்த்துவைப்பதை விட்டு கொஞ்சம் சுத்தமான காற்று, நல்ல நீர் ,
இயற்க்கையை சேர்த்துவைக்கலாம், ஒரு ஒருவரும் இதனை செய்ய ஆரம்பித்தால்
இயற்கைக்கும் நலம் நமது வாழ்க்கைகும் நன்மை, கடவுள் நம்மை பாதுகாக்க
அனுப்பிய காவலர்கள் இயற்கை அவர்களை நாமே சாகடித்து ஆபத்தை தேடிக்கொள்வது
எவ்வளவு அபத்தமானது.

ஜூன் 5 உலக சுற்றுச் சூழல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது, அன்று பள்ளிகளில்
மானவர்களுக்கான விழிப்புணர்வு விழாக்கள் நடந்துவார்கள்,மணவர்க்ள் அதனை ஒரு
நாள் மட்டும் கடைப்பிடிக்காமல் தினமும் கடைபிடிக்க வேண்டும்

கல்வி நிறுவனங்கள் இப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள்,
கல்வி,சுற்றுச்சூழல் மேலாண்மை என பல படிப்புகள் வழங்குகின்றன. மாணவர்கள்
சிறு வயதிலிருந்தே சுற்றுசூழல் மீது அக்கறை உடன் வளர்ந்தால் அது
நாட்டுக்கும் நல்லது.

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு

சுற்றுச்சூழல் இது நீங்களும், நானும், இன்ன பிற உயிர்களும் வாழத் தேவையான
முக்கியமான நாடி. நிலம், நீர், காற்று, வெளி, நெருப்பு, உணவுச் சுழற்சி, வன
உயிர்கள், விவசாயம், பருவ நிலை ஆகியவை வலையைப்போல சுற்றுச்சூழலில்
பிணைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் எந்த ஒரு சிறு இடத்தில்
அற்றுப்போனாலும், அது நமக்கும். நம்மைச் சார்ந்த, சாராத உயிரினங்களுக்கும்
பெரும் கேடு விளைவிக்கும்.

சுற்றுச்சூழல் பாதுகாக்க சில எளிய குறிப்புகள்:

வீடு கட்டும்போது முழுக்கவும் கான்க்ரீட்டால் கட்டாமல், வீட்டின்
பின்புறம் சிறு தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்கலாம்!

வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று
தனியாகப் பிரித்துவைக்கலாம்!

கூடுமானவரை சொந்த வாகனங்களைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து
வசதிகளைப் பயன்படுத்தலாம். சைக்கிள் உபயோகிப்பது இன்னும் சிறப்பு!

கடைகளுக்குச் செல்லும்போது பை எடுத்துச் செல்லலாம். அங்கு சென்று
பிளாஸ்டிக் பைகளை வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்!

கணினியில் பிரின்ட்-அவுட் எடுக்கும்போது ஒரு தாளின் இரண்டு
பக்கத்தையும் பயன்படுத்தலாம். இதனால் பேப்பர் பயன்பாடு குறையும்!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஆகியவற்றில் சிறு குழுக்களை ஏற்படுத்தி
சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம்!

இயற்கை அன்னை தன் தனத்தில் சுரக்கும் தாய் பாலை மழை நீராக தருகிறாள் மாறாக
நாமோ அவளுக்கு விஷத்தை பரிசளிக்கிறோம் அது மீண்டும் நம்மையே சேரும் என்பதை
மறந்து. இயற்கையை வாழவைத்தும் நாமும் வாழ்வோம்.

No comments:

Post a Comment

Post Top Ad