Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 3, 2021

தமிழகத்தில் ஏப்ரல் 6 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் வருகிற செவ்வாய்கிழமை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தற்போது தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பணிக்காக தற்போது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இதன் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் ஏப்ரல் 6ம் தேதி வரை அனைத்து தரப்பு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, தேர்தல் பயிற்சி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் பணிகளும் திங்கள் கிழமை வரை நீட்டிக்கப்படும். இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் 5ம் தேதி வரை அனைத்து தரப்பு பள்ளிகளுக்கும் விடுமுறை. மேலும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் காரணமாக பொது விடுமுறை என்பதால் ஏப்ரல் 6ம் தேதி வரை அனைத்து தரப்பு பள்ளிகளுக்கும் விடுமுறை விட வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment