Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 4, 2021

வீட்டில் இருந்து கிளம்பும் வேலை வெற்றிகரமாக முடிய வேண்டுமா? இதை மறக்காதீர்கள்!

வீட்டிலிருந்து வெளியே செல்லும் முன் நாம் செல்ல முற்படுகிற காரியம் வெற்றிகரமானதாகவே அமைய வேண்டும் என்றே நாம் பெரும்பாலும் நினைப்போம். நாம் செல்லுகிற காரியத்தை பொருத்து அதற்குரிய உழைப்பையும், பங்களிப்பையும் வழங்கினால் நிச்சயம் அந்த காரியம் வெற்றி பெறும். அதையும் தாண்டி வீட்டை விட்டு செல்லும் போது, இந்த காரியங்களை செய்தால் வெற்றியை நம் பக்கம் ஈர்க்கலாம் என்பது ஐதீகம்.

வீட்டை விட்டு கிளம்பி செல்லும் முன், செல்லும் காரியம் வெற்றிகரமாக அமைய கை கால்களை சுத்தமாக கழுவி, உடல் மற்றும் மனம் தூய்மையுடன் இருத்தல் அவசியம். அடுத்து வீட்டை விட்டு செல்லும் முன்னர் சிறிது தண்ணீர் குடித்து, வெல்லம் உண்ணுங்கள். இது நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்பதை விடவும், வெல்லமும் தண்ணீரும் உடனடி சக்தியை உடலுக்கு வழங்கும்.

வெற்றியை ஈர்க்கும் பல விஷயங்களில் மிக முக்கியமானது கிராம்பு ( இலவங்கம்) 5 கிராம்பினை உங்கள் பணம் வைக்கும் பர்ஸில் வைத்து கொள்வது நன்மை தரும். இந்த கிராம்பு பரப்பக்கூடிய வித்தியாசமான நறுமணத்தால் உங்களை சுற்றியுள்ள தீயவை அழிந்து போகும் என்பது நம்பிக்கை. பின் வீட்டை விட்டு வெளியேறுகையில் சில குருமிளகினை வீட்டின் வாசலில் உதிர்த்துவிட்டு செல்வதால்,, ஏதேனும் தீய சக்திகள், தீய அதிர்வுகள் இருப்பினும் அவை பிந்தொடராது என சொல்லப்படுகிறது.

முதற் கடவுளான கணபதியை வழிபட்டு "ஓம் கம் கணபதியே நமஹ "எனும் கணபதி மந்திரத்தை உச்சரித்தப்படியே வீட்டிலிருந்து வெளியேறுவது ஒரு ஆன்மீக பாதுகாப்பை நமக்கு வழங்கும். எண் கணிதத்தில் நம்பிக்கை இருப்பின் உங்களுக்குரிய எண் அமையக்கூடிய நாளில் நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்புவது நன்மை தரும். நீங்கள் செல்லும் இடத்திலும் சரி, வீட்டிலும் சரி பிரதான கதவின் வழியாக செல்லும் சாத்தியங்கள் இருப்பின் அவ்வாறே செல்லுங்கள். குறிப்பிட்ட இடம் சென்று வீடு திரும்பிய பின் உடனடியாக ஒரு தீபத்தை ஏற்றுவதால் முடிவு அல்லது வெற்றி உங்களுக்கு சாதகமானதாக அமையும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இவையெல்லாம் கேட்பதற்கு சற்று வேடிக்கையானதாக கூட இருக்கலாம். ஒருவரின் வெற்றி என்பது வெளிப்புற சூழலை சீரமைப்பதால் நிகழ்வதல்ல என்பது நிதர்சனம். ஒருவரின் தனிப்பட்ட உழைப்பை பொருத்தே அமைகிறது ஆயினும், இந்த எளிமையான குறிப்புகளை பயன்படுத்துவதால் எந்த தீங்கும் நேரப்போவதில்லை என்பதால். முயற்சிப்பதில் தவறில்லை.

No comments:

Post a Comment