Search This Blog

Saturday, April 3, 2021

உருளைக்கிழங்கு சிப்ஸ், சாக்லேட்ஸ் சாப்பிடுவது சிறுநீரக நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்!

0 comments
உருளைக்கிழங்கு சிப்ஸ், பிரட், பேக்கரி பொருட்கள் மற்றும் சாக்லேட் போன்ற தின்பண்டங்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு துரித உணவு பொருள் ஆகும். ஆனால் இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது கசிவு குடல் நோய்க்குறியை ஏற்படுத்தும் என்றும், இதனால் சிறுநீரக நோய் அபாயம் அதிகரிக்கும் என்றும் நொறுக்கு தீனிகள் பற்றிய ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அதிக வெப்பநிலையில் சமைக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மேம்பட்ட கிளைசேஷன் எண்ட் தயாரிப்புகள் (Advanced Glycation End - AGEs) எனப்படும் தீங்கு விளைவிக்கும் இரசாயன சேர்மங்கள் நிறைந்திருப்பதைக் காட்டியது. இந்த இரசாயனங்கள் ரோஸ்ட், ஃபிரை, க்ரில் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளுக்கு சுவையையும் நறுமணத்தையும் தருகின்றன.

இந்த AGE-க்கள் மெயிலார்ட் எதிர்வினை எனப்படும் ஒரு செயல்முறையைத் தூண்டுகின்றன. மேலும் அவை உடலின் ஆபத்து சமிக்ஞைகளை மாற்றி அழற்சி மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு வழிவகை செய்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஓட்ஸ், வேகவைத்து பின்னர் குளிரூட்டப்பட்ட அரிசி, பார்லி, பீன் மற்றும் பருப்பு வகைகளான கறுப்பு பீன்ஸ் மற்றும் பட்டாணி, பச்சை உருளைக்கிழங்கு ஸ்டார்ச், சமைத்து பின்னர் குளிரூட்டப்பட்ட உருளைக்கிழங்கு போன்ற உயர் எதிர்ப்பு ஸ்டார்ச் ஃபைபர் கொண்ட உணவுகளை சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்மபடுத்தும் என்றும் சயின்ஸ் அட்வான்சஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது பற்றி மோனாஷ் மத்திய மருத்துவ பள்ளியின் நீரிழிவு துறையின் இணை பேராசிரியரும் முன்னணி எழுத்தாளருமான மெலிண்டா கோக்லன் கூறியதாவது, "இந்த உணவுகள் உங்கள் கீழ் குடலில் இறங்கி, அடிப்படையில் உங்கள் குடல் பாக்டீரியாக்களுக்கான உணவாக செயல்படுகின்றன. குடல் பாக்டீரியாக்களின் அழற்சி எதிர்ப்பு இந்த உணவு உற்பத்தி செய்யும் வளர்சிதை மாற்றங்களை புளிக்க வைக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

உலகளவில், 10 சதவீத மக்கள் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பதப்படுத்தப்பட்ட உணவின் அத்தப்படியான நுகர்வு காரணமாக அனைத்துக் காரணங்களாலும் ஏற்படும் இறப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், புற்றுநோய் மற்றும் இரைப்பை குடல் நோய்களின் அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. மேலும் கோக்லன் கூறியதாவது, " பெரும்பாலான நடத்தை மாற்றங்களைப் போலவே, உணவு மாற்றங்களையும் நீண்ட காலத்தை பராமரிப்பது கடினம். ஆனால் எதிர்ப்பு உணவான ஸ்டார்ச் ஃபைபர் மற்றும் நீராவியில் சமைக்கப்பட்ட உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment