Subscribe Us

Monday, April 19, 2021

செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி?!

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பொறியியல் செமஸ்டர் தேர்வின்போது, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஒருவரி கேள்வி பதில் போல் இல்லாமல், விரிவாக பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. 

கேள்விக்கு சந்தேகம் ஏற்பட்டால் புத்தகம், இணையத்தளம் பார்த்து எழுதவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சியடைய முடியும் என்றும் தெரிகிறது.

No comments:

Post a Comment

Popular Feed