Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 18, 2021

உஷார்.. 'பிங்க் வாட்ஸ்ஆப்' என்ற பெயரில் பரவும் பணத்திற்கு உலை வைக்கும் வைரஸ் !

வாட்ஸ்அப்பில் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அம்சங்கள் பரவி வருவதாக நாட்டின் சைபா் பாதுகாப்பு அமைப்பான இந்திய கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (சிஇஆா்டி) எச்சரித்துள்ளது.

வாட்ஸ்அப், வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆண்ட்ராய்டு 2.21.4.18 வொஷனிலும், ஐஓஎஸ் 2.21.32 வொஷனிலும் இயங்கும் வாட்ஸ்அப்களில் சில அச்சுறுத்தல் அம்சங்கள் பரவி உள்ளன என்றும் அக்குழு கூறியிருந்தது.

இதன்மூலம் உங்கள் அறிதிறன்பேசியில் உள்ள தகவல்களை வெளியே இருக்கும் நபா் உங்களுக்குத் தெரியாமலே எடுத்து பயன்படுத்தலாம். இதனால் தனிநபா்களின் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்ய பயனாளிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள வாட்ஸ்அப் செயலியையும், ஐஓஎஸ் பயன்பாட்டாளா்கள் ஆப் ஸ்டோரில் உள்ள வாட்ஸ்அப் செயலியையும் புதிய வொஷனுக்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் வாட்ஸ்அப் மூலம் பெரும் அச்சுறுத்தல் ஒன்று உலா வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது வாட்ஸ் அப் குழுக்களில் "பிங்க் வாட்ஸ்அப்"என்ற ஆபத்தான வைரஸ் ஒன்று பரவி வருகிறது. பிங்க் லுக் வாட்ஸ்அப் என்று வரும் லிங்கை தொடவோ, திறக்கவோ, பார்வர்ட் செய்யவும் வேண்டாம்.

இதனால் பயனாளிகளின் வங்கிக் கணக்கு, பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் திருடப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே கூகுள் பிளே ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து டவுன்லோட் செய்த ஆப்களை பயன்படுத்துங்கள் மற்றவைகளை அகற்றிவிடுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது ஒட்டுமொத்தமாக அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அங்கு ஒரு வாட்ஸ்ஆப் குழுக்களில் லிங்க் ஒன்று வேகமாக பரவியது. அதில், குழு நண்பர்களின் கவனத்திற்கு, அதிகாரப்பூர்வமாக வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் பிங்க் வாட்ஸ்ஆப்பில், கூடுதல் புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது என http://whatsapp.profileviewz.com/?whatsapp என்ற லிங்க் வந்துள்ளது.

அந்த லிங்கை திறந்தவுடன் வாட்ஸ்ஆப் பயனாளர்கள் உள்ள அனைத்து குழுக்களுக்கும் வேகமாக பரவியது. அந்த வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள 200க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில், அந்த லிங்கை ஒருவர் தொட்டாலே மீண்டும் அனைத்து வாட்ஸ்ஆப் குழுக்களிலும் வேகமாக பரவியதால் அதிர்ச்சியடைந்தனர்.
லிங்க்கை அழித்தாலும் மீண்டும், மீண்டும் பரவியதால், அதிர்ச்சியடைந்த வாட்ஸ்ஆப் பயனாளர்கள் Pink watsup என ஒரு வைரஸ் பரவி வருகிறது அதை யாரும் திறக்கவோ, பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment