Thamizhkadal WhatsApp Channel

சிபிஎஸ்இ தேர்வு ஒத்திவைப்பு..? பிரதமர் மோடி ஆலோசனை..!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாள்தோறும் காரணம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மே மாதம் நடக்கும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கக்கோரி பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை எழுந்துள்ளது. சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்ய சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடன் பிரதமர் மோடி 12 மணிக்கு காணொளி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories