Thamizhkadal WhatsApp Channel

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சினை தொடர்ந்து இன்னொரு தடுப்பூசி!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசிகள் மூலமே பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து தயாரித்து இந்தியாவில் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து மத்திய அரசுக்கு வழங்கி வருகிறது.இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 11 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து இருப்பதால் சில மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவசர கால பயன்பாட்டுக்கு ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் பயன்படுத்தப்பட இருக்கும் 3வது தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ரஷியாவில் மட்டுமே இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுக்க 59 நாடுகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்தி வரும் நிலையில் கொரோனாவை தடுப்பதில் 91.6 சதவீதம் அளவுக்கு இந்த தடுப்பூசி வெற்றி பெற்றிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 2 முதல் 3 வாரங்களுக்குள் ரஷியாவில் இருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும் எனவும் மே மாத தொடக்கத்தில் இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து விடும் எனவும் அதன்பிறகு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தயாரிக்கும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஆகஸ்டு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அதுவரை ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எனவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இது தவிர பயோ-இ, நோவேக்ஸ், ஜைடஸ் கேடிலா, இன்ட்ராநேசல் ஆகிய 4 தடுப்பூசிகளும் விரைவில் இந்தியாவில் கிடைக்க வழிவகை செய்யபடலாம் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories