JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அகரம் அறக்கட்டளை கல்வி உதவித்தொகைக்கு, அரசு பள்ளி மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க உதவும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின், 'அகரம் பவுண்டேஷன்' சார்பில், விதை கல்வி உதவி திட்டத்தில், அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், உயர்கல்வி வாய்ப்புக்கு உதவி செய்யப்படுகிறது.
இதில், தகுதி பெற்றவர்களுக்கு உதவ, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
பள்ளி கல்வித்துறை இயக்குனர் வழிகாட்டுதல்படி, அகரம் விதை கல்வி உதவி திட்டத்தில், 2020 - 21ல், மாணவ, மாணவியரின், கல்லூரி கனவை நிறைவேற்ற, பிளஸ் 2 படிக்கும் திறன்பெற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்து, விண்ணப்பிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment