காலவரையரையின்றி பள்ளிகளை மூட உத்தரவு

தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா இரண்டாவது அலையில் மிக அதிகமான பாதிப்பு என்பதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்

இந்த நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான டெல்லியில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அதன் ஒரு பகுதியாக தற்போது அதிக கொரோனா பரவல் காரணமாக டெல்லி பள்ளிகள் காலவரையின்றி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளிகளையும் மறு அறிவிப்பு வரும் வரை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற உத்தரவு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories