பணம் செலவில்லாமல் கோடை காலத்தை குளிர் காலமாக மாற்றும் பானம். - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, April 7, 2021

பணம் செலவில்லாமல் கோடை காலத்தை குளிர் காலமாக மாற்றும் பானம்.

கொளுத்தும் கோடை வெப்பத்தினால் உடலில் உள்ள நீர்ச்சத்து வறட்சி அடைய ஆரம்பித்து, சருமம் பொலிவின்றி சோர்வுடன் காட்சியளிக்கும். உடல் வறட்சி அடையும் போது, நீர்ச்சத்து மட்டும் குறைவதில்லை, நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவற்றை இழந்து, அதனால் உடல் பலவீனம், வாந்தி, தலைவலி, மலச்சிக்கல் மற்றும் தசைப்பிடிப்புக்கள் போன்றவற்றையும் சந்திக்கக்கூடும்.இந்த பிரச்சினைகள் வராமல் தடுத்து ,உடலை பணம் செலவில்லாமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள சில பானங்களை தயாரிக்கும் முறைகளை கூறுகிறோம் .

தயிர் ஜூஸ்:

தேவையான பொருட்கள்:

தயிர் – 3 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

குளிர்ந்த நீர் – 1 1/2 கப்

இஞ்சிப் பொடி – 1 சிட்டிகை

உப்பு – சிறிது சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்

செய்முறை

ஒரு பாட்டிலில் தயிர், குளிர்ந்த நீர், கொத்தமல்லி, இஞ்சிப் பொடி, உப்பு சேர்த்து, பாட்டிலை மூடி சிறிது நேரம் நன்கு குலுக்கி, பின் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, மேலே சீரகப் பொடி தூவி பருகவும்.

லஸ்ஸி

தேவையான பொருட்கள்: கெட்டித் தயிர் – 5 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த நீர் – 1 பெரிய கப் சர்க்கரை – தேவையான அளவு துருவிய தேங்காய் – 1/4 கப் முந்திரி, உலர் திராட்சை - சிறிது

செய்முறை

முதலில் ஒரு மூடி கொண்ட டப்பாவில் தண்ணீர் ஊற்றி, அத்துடன் தயிர், துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்து, டப்பாவை மூடி நன்கு குலுக்கி, டம்ளரில் ஊற்றி முந்திரி மற்றும் உலர் திராட்சை தூவி பருகவும்.

புதினா எலுமிச்சை ஜூஸ்:

தேவையான பொருட்கள்:

புதினா – 1/4 கப் கொத்தமல்லி – 1/4 கப் குளிர்ந்த நீர் – 1 பெரிய கப் உப்பு – தேவையான அளவு எலுமிச்சை – 1/2

செய்முறை

புதினா மற்றும் கொத்தமல்லியை நன்கு நீரில் அலசி, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

தர்பூசணி ஜூஸ்:

தேவையான பொருட்கள்:

தர்பூசணி – 2 கப் தேன் – தேவையான அளவு குளிர்ந்த நீர் – 1/4 கப் ஐஸ் கட்டிகள் – சிறிது

செய்முறை

மிக்ஸியில் தர்பூசணி, குளிர்ந்த நீர், தேன் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, டம்ளரில் அப்படியே ஊற்றி ஐஸ் கட்டிகளைச் சேர்ந்து பருக வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad