'தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், தங்களது சங்க செயல்பாடுகள் அடிப்படையில், ஓட்டுச் சாவடியில் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படக் கூடாது. புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழகம் முழுதும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டுச் சாவடி பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், நாளை காலை, 10:00 மணிக்கு, மாவட்ட
தேர்தல் அதிகாரி குறிப்பிடும் இடத்தில் ஆஜராக வேண்டும்.
தேர்தல் துறை உத்தரவுப்படி, அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச் சாவடிகளில், நாளை மதியம் 12:00 மணிக்குள் பொறுப்புகளை ஏற்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் பணியின்போது, எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படக் கூடாது. 'ஜாக்டோ - ஜியோ' போன்ற கூட்டமைப்புகளின் செயல்பாடுகளை மனதில் வைத்து, ஓட்டுச்சாவடியில் தேர்தல் பணிகளில் பாரபட்சம் காட்டக் கூடாது.






No comments:
Post a Comment