Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 15, 2021

அரசு அலுவலகம் மற்றும் பள்ளிகள் நேரம் மாற்றம் – மாநில அரசு உத்தரவு!!

நடப்பு ஆண்டில் கோடை கால வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வெப்பத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்களின் உடலில்'

நீரின் அளவு குறைந்து விடும். இதனை கருத்தில் கொண்டு கர்நாடகா மாநில அரசு நேர மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

புதிய அட்டவணை:

அரசு அறிவித்துள்ள நேர மாற்றத்தின் படி, மாநிலத்தில் காலை 8 மணி முதல் மதியம் 1:10 மணி வரை பள்ளிகள் செயல்படும். இதனால் ஒவ்வொரு பாட கால அளவும் 40 நிமிடங்கள் என்ற அளவில் மொத்தம் 7 பாட காலங்கள் இருக்கும். ஆனால் ஆசிரியர்கள் மட்டும் தொடர்ந்து மதியம் 1:30 மணி வரை பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு வெயில் காலத்தில் ஏற்படும் நீரிழப்பை சரி செய்யும் பொருட்டு பள்ளிகளில் இரண்டு முறை குடிநீர் மணியை எழுப்பி கட்டாயமாக தண்ணீர் குடிக்க அறிவுறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள்:

கலயானா மாவட்டம் போன்ற கர்நாடகத்தின் வடக்கு பகுதி மாவட்டங்களில் முன்னதாகவே அரசு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை ஏப்ரல் 12ம் தேதி முதல் செயல்படுகிறது. இதேபோல், பெலகாவி பிரிவில் உள்ள விஜயபுரா மாவட்டத்திற்கும், பாகல்கோட் மற்றும் கலாபுராகி பிரிவுகளில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய நேர மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் இந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்கு எந்த இடையூரும் இல்லாமல் தங்கள் கடைமைகளை செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment