ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு அரசு விளக்கமளிக்க உத்தரவு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, April 9, 2021

ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு அரசு விளக்கமளிக்க உத்தரவு

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு தேர்வில், 98 சதவீதம் பேர் தோல்விஅடைந்ததால், மறு தேர்வு நடத்தக்கோரிய வழக்கில், தமிழக அரசிடம் விபரம் பெற்றுத் தெரிவிக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம், மீனாட்சி சுந்தரி தாக்கல் செய்த பொதுநல மனு:ஊரடங்கில் செப்டம்பரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. 

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்.,21 முதல், அக்.,7 வரை தேர்வு நடத்த மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவித்தார்.தேர்விற்கு தயாராக எங்களுக்கு போதிய வாய்ப்பளிக்கவில்லை. ஊரடங்கில் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தோம். தேர்விற்கான பாடத்திட்டத்தை குறைக்கவில்லை. 

அவசரகதியில் எங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. மாவட்டத்திற்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டது. பொதுப் போக்குவரத்து குறைவாக இருந்ததால், தொலைதுாரங்களில் இருந்த தேர்வு மையங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.இச்சூழலில் தேர்வு நடந்ததால் தேர்வு முடிவுகளும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தன.

98 சதவீத மாணவர்கள் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இது ஆசிரியர் பயிற்சி தேர்வு வரலாற்றில் மோசமான தேர்வு முடிவாக அமைந்தது. மறு தேர்வு நடத்தக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம்.2019 - 20 கல்வியாண்டிற்கு மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு மனு தாக்கல் செய்தார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு, &'அரசுத் தரப்பில் விபரம் பெற்று அரசு வழக்கறிஞர் ஏப்.,27 ல் தெரிவிக்க வேண்டும்,&' என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad