Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 8, 2021

மாஸ்க் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது !!

தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்றுக்கு மத்தியில் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட முடியாது என தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா தொற்றுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4276 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

பெட்ரோல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துவருமாறு தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏற்கனவே, பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை, வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் உட்பட மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி, ஆட்டோகளுக்கு ஓட்டுநர் உட்பட 2 பேருக்கு மட்டுமே அனுமதி, இறுதி ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே அனுமதி, தியேட்டர்களில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி, விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி, உணவகங்கள்,தேநீர் கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி, கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை கடைகள் மட்டும் வரும் 10ம் தேதி முதல் செயல்பட தடை, திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment