Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 8, 2021

CBSE Exams 2021:10-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு!

சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் 2021: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ வாரிய தேர்வு 2021 ஆம் கல்வி ஆண்டுக்கான மாதிரி வினாத்தாள்கள் வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ வாரியம் 10, 12 வகுப்புக்கான அனைத்து பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாள்களை சிபிஎஸ்அகாடெமிக் cbseacademic.nic.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த வருட சிபிஎஸ்இ 10, 12 வாரியத் தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றி மாதிரி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம்.

சிபிஎஸ்இ போர்டு தேர்வு 2021-க்கான மாதிரி ஆவணங்களை எவ்வாறு பதிவிறக்குவது என்பது இங்கே காண்க:

Cbseacademic.nic.in என்ற சிபிஎஸ்இ அகாடமிக் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செலல்வும்`செல்லவும்.

இந்த பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் சிபிஎஸ்இ போர்டு தேர்வு 2021 மாதிரி வினாத்தாள்கள் என்பதை கிளிக் செய்யவும்.

ஒரு புதிய பக்கம் திறக்கப்படும், அங்கு மாணவர்கள் 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு என இருப்பதை கிளிக் செய்ய வேண்டும்.

புதிதாக திறக்கப்பட்ட பக்கத்தில் பாடம் வாரியாக மாதிரி வினாத்தாள்களை நீங்கள் காணலாம். அதை பதிவிறக்கவும்.

தேவைப்பட்டால் மாணவர்கள் மாதிரி வினாத்தாள்களை நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்புகள் மூலம் சிபிஎஸ்இ போர்டு மாதிரி வினாத்தாள்களை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்:

10 ஆம் வகுப்பு மாதிரி ஆவணங்களை பதிவிறக்கம் செய்வதற்கான நேரடி இணைப்பு

வகுப்பு 12 மாதிரி ஆவணங்களை பதிவிறக்கம் செய்வதற்கான நேரடி இணைப்பு

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வு மே 4 ஆம் தேதி முதல் தொடங்கும். ஆனால் 10 ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 7 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 14 ஆம் தேதியும் முடிவடையும். CBSE வாரியம் வழங்கிய வழிகாட்டுதலின் படி, மாணவர்கள் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

No comments:

Post a Comment