Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 22, 2021

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொது தேர்வு ரத்து? மாநில கல்வி அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் கருத்துகேட்பு

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஒரு வருடமாக பள்ளிகள் திறக்காத நிலையில், பொதுத் தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் எப்போது தேர்வு நடக்கும் என்ற ஏக்கத்தில் வீடுகளில் முடங்கியுள்ளனர். 

இந்நிலையில், சிபிஎஸ்இ என்னும் மத்திய இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு மே 4ம் தேதி முதல் பொதுத் தேர்வு நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 

இந்த இக்கட்டான சூழ்நிலையில், பொதுத் தேர்வு நடத்துவதா அல்லது தள்ளிப் போடுவதா என்பது குறித்து சிபிஎஸ்இ வாரியம் இதுவரை இறுதியான முடிவுகள் ஏதும் அறிவிக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக, கொரோனா தொற்று பரவல் குறித்தும் ஆய்வு செய்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் நேரத்தில் பொதுத் தேர்வு நடத்துவதற்கு எதிராக மாணவர்களும், பெற்றோரும் பேச தொடங்கிவிட்டனர். ம் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போதுள்ள நிலையை ஆய்வு செய்து வருவதாகவும் தேர்வை ஒத்தி வைப்பதா அல்லது தேர்வை நடத்துவதா என்பது தொடர்பாக இறுதி முடிவு எடுத்து அதை ஜூன் 1ம் தேதி அறிவிப்போம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை சிபிஎஸ்இ ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும், மாணவர்களும், பெற்றோரும் 12ம் வகுப்புக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதுடன், கொரோனா தொற்று நேரத்தில் மாணவர்களை தேர்வு மையங்களுக்கு வரவழைத்து தேர்வு எழுத வைத்தால் அது பெரும் பிரச்னையாகிவிடும் என்றும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தேசிய கழகம் சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்வு மையங்களுக்கு மாணவர்களை வரவழைத்து தேர்வு எழுத வைப்பதை தவிர்த்து, வேறு மாற்று முறையின் கீழ் தேர்வை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக, தேர்வை தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் மாற்று தேர்வு முறையை பின்பற்றினால், மாணவர்களுக்கு மன அழுத்தம் குறையும் என்றும் தெரிவித்துள்ளது.

மாணவர்களும், பெற்றோரும் இந்த தேர்வுக்கு பிறகு நல்ல கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று காத்திருக்கும் நிலையில் மாற்றுத் தேர்வு முறை ஆறுதலை அளிக்கும் என்றும் அந்த பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், கேரளாவை சேர்ந்த ஒரு ஆசிரியர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அதில், சிபிஎஸ்இ தேர்வை நடத்த வேண்டும் என்றும், தேர்வை ரத்து செய்தால் அது மாணவர்களை பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 12ம் வகுப்பு தேர்வு என்பது மாணவர்களின் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்து உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதனால் தேர்வை ரத்து செய்வது என்பது கல்வி முறையை சிதைப்பது போலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டு அதில் தேர்வு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தேர்வு நடத்துவதற்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். 

இருந்தபோதிலும், தேர்வு தொடர்பான விஷயத்தில் சிபிஎஸ்இ எந்தவிதமான அறிக்கையும் இதுவரை வெளியிடாமல், ஜூன் 1ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அனைத்து மாநில கல்விச் செயலாளர்களுடன் இணைய தளத்தில் தொடர்பு கொண்டு தேர்வு நடத்துவது தொடர்பாக அவர்களின் கருத்துகளை கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment