Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 23, 2021

செப்டம்பரில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு? - அனைத்து மாநில அரசுகளும் உறுதி!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில், இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. காணொலி வாயிலாக நடைபெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச கல்வி அமைச்சர்கள், கல்வி செயலாளர்கள் மற்றும் மாநில தேர்வு வாரியங்களின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

12ஆம் வகுப்பு தேர்வு மாணவர்களின் எதிர்கால நலன் அடங்கியிருப்பதால் பொறுமையாக யோசித்து முடிவெடுக்க வேண்டிய விஷயமாக இது பார்க்கப்படுகிறது. இதனால் தான் பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த பாடப்பிரிவுகளை எடுத்துப் படிப்பதற்கு 12ஆம் வகுப்பு தேர்வில் பெறும் மதிப்பெண் மிக முக்கியமானது. அதனால் பெரும்பாலான மாநில அமைச்சர்கள் 12ஆம் வகுப்பு ரத்து செய்ய முடிவில் இல்லை என்றே கூறப்படுகிறது.

ஆகவே அனைத்து மாநில அரசுகளும் கொரோனா பரவல் குறைந்த பிறகு தேர்வு நடத்துவதில் தீர்மானமாக உள்ளதாக தெரிகிறது. கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கலாம் என்பதால், செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. அதற்காக மாணவர்களை இப்போதே தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். கொரோனா பரவல் குறைந்தால் நிச்சயம் செப்டம்பரில் தேர்வு நடத்தப்படும் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

No comments:

Post a Comment